search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வெற்றிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    இங்கிலாந்து வெற்றிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    விராட் கோலி, தவான், டோனியின் ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli #MSDhoni #Dhawan
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும் இந்த போட்டிக்கான ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.



    இதனால் ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. முதல் ஐந்து ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை வில்லே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், அதே நேரத்தில் சீரான வேகத்தில் ரன்களும் குவித்து வந்தனர். பவர்பிளே ஆன முதல் 10 ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    13-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். 17-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரி விரட்டினார். 18-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அவர் 49 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.



    அடுத்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 19.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 24-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார் விராட் கோலி. 25-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கார்த்திக் போல்டானார். இவர் 22 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்கள். ஆனால் 31-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி போல்டானார். அவர் 72 பந்தில் 8 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்தார். அப்போது இந்தியா 30.1 ஓவரில் 156 ரன்கள் சேர்த்திருந்தது.

    அடுத்து வந்த ரெய்னா இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஓரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, அதன்பின் மீள முடியவில்லை. ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    Next Story
    ×