search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
    X

    2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

    ஜமைக்காவில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை 166 ரன்னில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 12-ந்தேதி (வியாழக்கிழமை) ஜமைக்கா கிங்ஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய கிரேக் பிராத்வைட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் சேர்த்தார். ஹேட்மையர் 86 ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் (47), ஷாகிப் அல் ஹசன் (32) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காள தேசம் 149 ரன்னில் சுருண்டது.

    205 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷாகிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம் 129 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். ஷாகிப் அல் ஹசன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 129 ரன்னுடன் 334 ரன்கள் முன்னிலைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ். இதனால் வங்காள தேசத்திற்கு 335 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.



    335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் டக்அவுட்டில் வெளியேறினார். லித்தோன் தாஸ் 33 ரன்களும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 54 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்களும் அடிக்க 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 என தொடரைக் கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹோல்டர், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    Next Story
    ×