search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் இறுதி - இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
    X

    விம்பிள்டன் இறுதி - இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையருக்கான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது #Wimbledon2018 #DoublesFinal
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி அமெரிக்காவின் நிகோல் மெலிசர் -செக் குடியரசின் க்வேடா பெஸ்ச்கேவுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 4-6 என ரெஜிகோவா - சினியகோவா ஜோடி இழந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட  அந்த ஜோடி இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. 

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி 6-0 என்ற நேர் செட்டில் வென்றது.

    இறுதியில், 4-6, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் நிகோல் மெலிசர் - க்வேடா பெஸ்ச்கேவை வென்று ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
    Next Story
    ×