search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது இடம் யாருக்கு? பெல்ஜியம்- இங்கிலாந்து நாளை மோதல்
    X

    3-வது இடம் யாருக்கு? பெல்ஜியம்- இங்கிலாந்து நாளை மோதல்

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். #FIFA2018 #fifa2018 #England #Belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழா முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன.

    இறுதிப்போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை (14-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் மோதுவது இது 2-வது முறையாகும். ‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின.

    இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

    பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    1966-ம் ஆண்டு சாம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது. தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹாரிகேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #FIFA2018 #fifa2018 #England #Belgium
    Next Story
    ×