search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறுவாரா? ஜோகோவிச்சுடன் இன்று மோதல்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறுவாரா? ஜோகோவிச்சுடன் இன்று மோதல்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலுடன் செர்பியா வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனும், (தென்ஆப்பிரிக்கா)- 9-ம் நிலை வீரர் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றதில்லை. இதில் ஆண்டர்சன் கடந்த ஆண்டு அமெரிக்க ஒபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.

    நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை கால் இறுதியில் வீழ்த்திய ஆண்டர்சன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    இரவு 7.30மணிக்கு மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள நடால் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6-வது முறையாக தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் விம்பிள்டன் பட்டத்தை (2008, 2010) 2 முறை கைப்பற்றி உள்ளார். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ஜோகோவிச் கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    12 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை தகுதி பெற்று உள்ளார். அதில் 2011, 2014, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் கடந்த ஆண்டு கடும் சறுக்கலை சந்தித்தார். அதில் இருந்து மீண்டும் தற்போது விம்பிள்டன் அரை இறுதியை எட்டி உள்ளார். இருவரும் இதுவரை 51 முறை மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 26 தடவையும், நடால் 25 தடவையும் வெற்றி பெற்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    Next Story
    ×