search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதியில் நடால் ஜோகோவிச்சை சந்திக்கிறார்
    X

    விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதியில் நடால் ஜோகோவிச்சை சந்திக்கிறார்

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால், பலம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2-வது தரவரிசையில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோவை (அர்ஜென் டினா) எதிர்கொண்டார்.

    இதில் நடால் 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 4 மணி 47 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    நடால் அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். அவர் கால் இறுதியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை தோற்கடித்து இருந்தார்.

    மற்றொரு கால்இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 6-7 (5-7), 7-6 (9-7), 6-4, 6-3 என்ற கணக்கில் ரோனிக்கை (கனடா) வீழ்த்தினார். இஸ்னெர் அரை இறுதியில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார்.

    ஆண்டர்சன் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி இருந்தார். அரை இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதி ஆட்டங்களில் கெர்பர் (ஜெர்மனி)- ஒஸ்டா பென்கோ (லாத்வியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) -ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி) மோதுகிறார்கள். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    Next Story
    ×