search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடரில் குல்தீப் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்- பிராட் ஹாக்
    X

    இங்கிலாந்து தொடரில் குல்தீப் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்- பிராட் ஹாக்

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    ஒருநாள் மற்றும் டி20 தொடரைக் காட்டிலும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலியாவின் ரிஸ்ட் ஸ்பின்னரும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் வர்ணனையாளராக செயல்பட இருப்பவரும் ஆன பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் ‘‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் விதவிதமான மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நான் டெஸ்ட் போட்டியில் அவரை உறுதியாக தேர்வு செய்வேன்.

    குல்தீப் யாதவ் அதிக அளவில் ஸ்டம்பை தாக்கும் வகையில்தான் பந்து வீசுகிறார். அவருடைய குயிக்-ஆர்ம் ஆக்சன் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, தற்போதைய பந்து வீச்சைவிட சற்று கூடுதல் வேகத்தை வெளிப்படுத்த வேண்டும். இது பேட்ஸ்மேன்கள் பந்தை பலமாக தூக்கி அடிப்பதை தடுக்கும்’’ என்றார்.
    Next Story
    ×