
பாகிஸ்தான் வெற்றிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் பாராட்டு தெரிவித்திருந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரோல் செய்தனர்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 198 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்தில் 100 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 33 ரன்கள் குவிக்க இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

இந்தியாவின் வெற்றியையும், ரோகித் சர்மாவின் அபார சதத்தையும் பாராட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியையும், இந்திய வீரரையும் பாராட்டியதற்காக ஆக்தரை ட்ரோல் செய்து வருகின்றனர்.