search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச் கால்இறுதிக்கு தகுதி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச் கால்இறுதிக்கு தகுதி

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    Next Story
    ×