search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரோஷியா - அர்ஜென்டினா இன்று மோதல்- மெஸ்சிக்கு நெருக்கடி
    X

    குரோஷியா - அர்ஜென்டினா இன்று மோதல்- மெஸ்சிக்கு நெருக்கடி

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் 2-வது ஆட்டத்தில் குரோஷியாவுடன் மோதும் அர்ஜென்டினா வெற்றி நெருக்கடியில் உள்ளது. #WorldCupRussia #FIFA2018
    நோவாசார்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜிரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ள ‘டி’ பிரிவு குரூப் ஆப் டெத் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த பிரிவில் குரோஷியா 3 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகள் தலா 1 புள்ளியுடன் உள்ளன. நைஜிரியா புள்ளி எதுவும் பெறவில்லை.

    2 முறை சாம்பியனான அர்ஜென்டினா 2-வது ஆட்டத்தில் குரோஷியாவை இன்று எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. புதுமுக அணியான ஐஸ்லாந்துடன் ‘டிரா’ செய்ததால் குரோஷியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது.

    அந்த அணியின் கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரரான லியோனல் மெஸ்சி கடும் நெருக்கடியில் உள்ளார். ஐஸ்லாந்துக்கு எதிராக பெனால்டி கிக்கை தவறவிட்ட அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி தனது அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார்.



    இதனால் வீரர்கள் வரிசையிலும் மாற்றம் இருக்கலாம்.

    குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருக்கும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் நைஜிரியாவை வீழ்த்தி இருந்தது. அந்த அணியில் மோட்ரிக் நம்பிக்கை நட்சத்திர வீரராக உள்ளார்.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் அர்ஜென்டினா 2 முறையும், குரோஜியா 1 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.

    ‘சி’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க்-ஆஸ்திரேலியா (மாலை 5.30) பிரான்ஸ்-பெரு (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    டென்மார்க், பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. 2-வது சுற்றுக்கு நுழையும் டென்மார்க் தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் பெருவையும், பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது.

    இதனால் போட்டியில் இருந்து வெளியேறாமல் இருக்க ஆஸ்திரேலியா, பெரு அணிகள் வெற்றிக்காக கடுமையாக போராடும். #WorldCupRussia #FIFA2018
    Next Story
    ×