search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் எங்கே போயிருந்தேன் என்பதை மற்றவர்களிடம் சொல்ல தேவையில்லை - ரோகித் சர்மா
    X

    நான் எங்கே போயிருந்தேன் என்பதை மற்றவர்களிடம் சொல்ல தேவையில்லை - ரோகித் சர்மா

    சில நாட்களுக்கு முன்னதாக நடந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்காதது குறித்து வெளியான தகவல்களுக்கு ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.

    இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.

    இதனால், முகம்மது சமி மற்றும் சாம்சன் ஆகியோரை போல ரோகித் சர்மாவும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் எனவும் அவருக்கு பதிலாக ரகானேவை மாற்று வீரராக தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து செல்ல உள்ளார். இந்நிலையில், தனது குறித்தான செய்திகள் தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “தேவையில்லாமல் சில சேனல்களும் மீடியாவும் தவறான தகவல்களை பரப்புகின்றன. நான் எங்கே போயிருந்தேன், எங்கு நேரத்தை செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ-யோ தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. அது எனது சொந்த விவகாரம். செய்திகளை வெளியிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து வெளியிடுவது நல்லது” என காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×