search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கால்பந்து- கொலம்பியாவை 2-1 துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று சாதனை
    X

    உலகக்கோப்பை கால்பந்து- கொலம்பியாவை 2-1 துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று சாதனை

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் கொலம்பியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜப்பான் வீரர் அடித்த பந்து கொலம்பியாவின் கோல் எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்தது. அப்போது கோல் எல்லைக்குள் வைத்து கார்லஸ் சான்செஸ் மொரேனோ பந்தை தடுக்க முயன்றார்.

    அப்போது பந்து எதிர்பாராத விதமாக அவரது கையில் பட்டது. இதனால் உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஷின்ஜி கவாஜா கோல் அடித்தார். இதனால் 6-வது நிமிடத்திலேயே ஜப்பான் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் கொலம்பியா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தாலும் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ ப்ரீ ஹிக் வாய்ப்பு பயன்படுத்தில் கோல் அடித்தார்.

    இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களுடன் 1-1 என சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது.



    உலகக்கோப்பை வரலாற்றில் ஆசிய கண்ட அணி தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அணியை தோற்கடித்ததே கிடையாது. முதன்முறையாக கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் அசத்தியுள்ளது.
    Next Story
    ×