search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்களின் முழு விவரம்
    X

    உலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்களின் முழு விவரம்

    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த எகிப்து அணிகள் மோதுகின்றன.

    ரஷிய அணி தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    எகிப்து அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் தோற்றது. இதனால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான முகமது ஷாலா இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். அவரது வருகையால் எகிப்து அணி எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணிக்காக ஆடிய போது ஷாலாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உருகுவேக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நட்சத்திர வீரரான அவரால் எகிப்து அணிக்கு ஆட முடியவில்லை. இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பதால் முகமது ஷாலா களம் இறங்குகிறார்.

    இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. தரவரிசையில் எகிப்து 45-வது இடத்திலும், ரஷியா 70-வது இடத்திலும் உள்ளன.

    ‘எச்‘ பிரிவில் இன்று முதல் ஆட்டங்கள் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு இந்த பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் தென்அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த கொலம்பியா- ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் கொலம்பியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கொலம்பியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து- செனகல் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். போலந்து வெற்றி பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    Next Story
    ×