search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்- கடைசி நாளில் 296 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுமா?
    X

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்- கடைசி நாளில் 296 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுமா?

    இலங்கைக்கு எதிரான கடைசி நாளில் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்குகியுள்ளது. #SLvWI
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் சண்டிமல் மட்டும் 119 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இலங்கை முதல் இன்னிங்சில் 253 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித் (61), டவ்ரிச் (55) ஆகியோரின் அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.



    47 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. குசால் மெண்டிஸ் (87), டிக்வெல்லா (62) ஆகியோரின் அரைசதங்களால் இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 2.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 342 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஒட்டுமொத்தமாக இலங்கை 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.



    இன்றைய கடைசி நாளில் 90 ஓவர்கள் வீச வாய்ப்புள்ளது. இதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இலக்கை எட்டினால்  வெற்றி பெறும். தாக்குப்பிடித்து விளையாடினால் டிரா ஆகும்.
    Next Story
    ×