search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்
    X

    உலக கோப்பை கால்பந்து 2018: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்

    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் 3 ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சுவீடன் 2006-ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பையில் விளையாடுகிறது. இந்த அணியில் மார்கஸ் பெர்க், போர்ஸ் பெர்க், லின்டலாப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    தென்கொரியாவைவிட சுவீடன் பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெற்றுள்ள தென்கொரியா அணியில் நட்சத்திர வீரராக சன் ஹியூங்-மின் உள்ளார். அந்த அணி 2002-ம் ஆண்டு உலககோப்பையில் அரை இறுதி வரை சென்றது.

    சுவீடனுக்கு எதிராக வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம்- பனாமா (‘ஜி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஈடன் ஹசார்ட், கெவின் புருனி, லூகாஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

    பலம் வாய்ந்த அந்த அணி பனாமாவை எளிதாக தோற்கடிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமெரிக்க கண்ட அணியான பனாமா முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது.

    அந்த அணி தகுதி சுற்றில் அமெரிக்காவை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது. இதுபோன்ற அதிர்ச்சியை உலக கோப்பையிலும் கொடுக்ககாத்து இருக்கிறது.

    இரவு 11.30 மணிக்கு ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- துனிசியா அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    முன்னாள் சாம்பியான இங்கிலாந்து அணியில் ஹேரிகானே, ஜேமி வார்டி, ஸ்டெர்லிங் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். மேலும் இளம் வீரர்களை அதிகமாக கொண்டு இருக்கிறது. இதனால் அந்த அணி எழுச்சியுடன் விளையாடும்.

    கடந்த உலக கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த முறை சாதிக்கும் முனைப்பில் உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 5-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக போராட வேண்டியது இருக்கும். #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    Next Story
    ×