search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் நாளை தொடக்கம்

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை தொடங்குகிறது. #IND #AFG #INDvAFG
    பெங்களூர்:

    ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது.

    அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிடப்பட்டது.

    அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.

    கேப்டன் விராட்கோலி இங்கிலாந்து தொடருக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    தவானும், முரளி விஜய்யும் தொடக்க வீரராக ஆடுவார்கள். ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்த லோகேஷ் ராகுலுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் இந்தியா வலிமையுடன் இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தும் என்று கருதப்டுகிறது. புஜாரா, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    சுழற்பந்து வீரர்களான அஸ்வின்-ஜடேஜா கூட்டணி டெஸ்ட் தொடர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகிறது. இதனால் இருவரும் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள். வேகப்பந்து வீச்சில் உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா உள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சில் பலமாக உள்ளது. ரஷீத்கான், முஜீபுர் ரகுமான் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.



    இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரகானே (கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

    ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானி ஸ்காய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர்கம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் -உர்- ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான். #IND #AFG #INDvAFG
    Next Story
    ×