search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி சிலையின் காதை உடைத்த ரசிகர்கள்
    X

    விராட் கோலி சிலையின் காதை உடைத்த ரசிகர்கள்

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள விராட் கோலி சிலையின் காது பகுதி உடைந்துள்ளது. #ViratKohli #ViratKohliWaxStatue #MadameTussauds

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளன. 

    இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வரும் கேப்டன் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை கண்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் 2013-ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் வெற்றிகளை பாராட்டும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 



    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலையானது கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலையை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். 

    இந்நிலையில், விராட் கோலி சிலையின் காது பகுதி உடைந்துள்ளது. அப்பகுதியில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததே அவரது சிலையின் காது பகுதி உடைய காரணம் என அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டநெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடைந்த காதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. #ViratKohli #ViratKohliWaxStatue #MadameTussauds
    Next Story
    ×