search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20-ஐ புறந்தள்ளி விட்டு டெஸ்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- கிரேம் ஸ்மித்
    X

    டி20-ஐ புறந்தள்ளி விட்டு டெஸ்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- கிரேம் ஸ்மித்

    டி20 கிரிக்கெட்டை புறந்தள்ளிவிட்டு டெஸ்டிற்கு முக்கியத்துகம் கொடுக்க வேண்டும் தென்ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் கூறியுள்ளார். #ICC
    டி20 கிரிக்கெட்டிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வருவது தற்போதைய நிலையில் கடினமான விஷயமாக உள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் வந்து பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    ஆனால் டி20 கிரிக்கெட் நான்கு மணி நேரம் மட்டுமே நடப்பதால் ரசிகர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இதனால் வருவாய் அதிகரிக்கிறது. டி20 மீதான மோகம் பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசியும் வருமானத்தை கணக்கில் கொண்டு டி20 போட்டியை ஊக்குவிக்க இருக்கிறது.

    இந்நிலையில் டி20-ஐ புறந்தள்ளி விட்டு டெஸ்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரேம் ஸ்மித் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட் சர்வதேச லெவலில் விளையாடப்படக் கூடாது என்பதில் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஒருவேளை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை உலகக்கோப்பை தொடர் வேண்டுமேனால் நடக்கலாம். ஆனால், இது உள்ளூர் அடிப்படை கிரிக்கெட் முறையை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும்.



    டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சில வரைமுறைகள் தேவை, அதை எப்படி பெறப்போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்ய வேண்டும். ஏராளமான பணங்கள் டி20 போட்டிக்காக விதைக்கப்படுகின்றன.

    கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஐசிசி உட்கார்பந்து பேச வேண்டும். வருடத்தில் 6 மாதங்கள் உள்ளூர் டி20 போட்டிகளிலும், 6 மாதங்கள் சர்வதேச போட்டிகளிலும் விளையாட வேண்டும். இதுகுறித்து விவாதம் தேவை. ஏனென்றால், தற்போதைய சிஸ்டம் அனைத்தும் கிரிக்கெட்டை காப்பாற்றும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×