search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயதைவிட உடற்தகுதியே முக்கியம்- டோனி
    X

    வயதைவிட உடற்தகுதியே முக்கியம்- டோனி

    கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்சினை கிடையாது எனவும் உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #CSK #Dhoni
    மும்பை:

    2 ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

    கேப்டன் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வாட்சன் (36), பிராவோ (34), டுபெலிசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். இதனால் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்சை “அப்பாக்கள் அணி” என்று விமர்சனம் செய்தனர். இதற்கு அவர்கள் கோப்பையை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

    ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றபோது டோனி இது தொடர்பாக கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை சொல்லலாம். 32 வயதான அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம்.



    இறுதிப்போட்டிக்கு நுழைந்த பிறகு அனைத்து வீரர்களுக்கும் அவர்களது பங்களிப்பு என்ன என்பது தெரியும். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். டுபெலிசிசை முதலிலும், அம்பதி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை.

    இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவது கடினம். புள்ளி விவரங்களை பற்றி பலர் பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27 (நேற்று) எனது ஜெர்சி எண் 7, எங்களுக்கு 7-வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் காரணமில்லை. கடைசியில் நாங்கள் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றுள்ளோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.#IPL2018 #CSK #Dhoni
    Next Story
    ×