search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு- ஜஸ்டின் லாங்கர்
    X

    சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு- ஜஸ்டின் லாங்கர்

    உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் இலக்கு என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.#ENGvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டின்போது ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இதற்கு வார்னர் மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும். பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த செயலால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு பெரிய அளவில் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள ஆஸ்திரேலியா முயற்சி செய்து வருகிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியா சர்வதேச போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு தயாராகி வரும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘நீங்கள் எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் அல்லது எத்தனை போட்டியில் விளையாடுகிறீர்கள் அல்லது எத்தனை ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம் அல்லை. நீங்கள் உண்மையாக விளையாடவில்லை எனில், மக்கள் அதை நினைவில் கொள்வார்கள்.



    நமக்குள்ள நட்புணர்வு மிகவும் முக்கியமானது. நாம் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணியில் உள்ள எல்லோருக்கும் இது பொருந்தும். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நம்முடைய பழக்க வழக்கம் நன்றாக இருந்தால், ரசிகர்களிடம் இருந்து மரியாதை மற்றும் உண்மைத்தன்மையை பெற முடியும்.

    ஆஸ்திரேலியா மக்கள் உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்களை விட அது அதிகமானது. நாம் கடந்த காலத்தில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறோம். அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பதற்கான நாம் பெருமைப்பட வேண்டும். நாம் அந்த வழயில் சென்று அதேபோல் செயல்பட வேண்டும். அதில் இருந்து நாம் விலகிவிடக்கூடாது’’ என்றார்.

    இங்கிலாந்து - ஆஸதிரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 13-ந்தேதி தொடங்குகிறது. 
    Next Story
    ×