search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா நீக்கம்
    X

    ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா நீக்கம்

    ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா விடுவிக்கப்பட்டார். #TOPSAthlete
    புதுடெல்லி:

    2020, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் டாப்ஸ் எனப்படும் சிறப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முழு பயிற்சி தரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி தரப்பட உள்ளது. இந்த பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பெயரும் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின், ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சித் திட்டத்தில் இருந்து சானியா மிர்ஸா உள்பட 8 வீரர்களின் பெயர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் சானியா மிர்ஸா தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 5 மல்யுத்த வீரர்களும், இரண்டு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.


    இதில் தடகள வீரர்களான லில்லி தாஸ், சஞ்சீவினி யாதவ், தேஜஸ்வினி சங்கர் ஆகியோரும், தடகள வீரர்களான தருண்குமார், மோகன்குமார் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் 2020-ம் ஆண்டு வரை டாப்ஸ் திட்டத்தில் கீழ் பயிற்சி பெறுவர்.

    துப்பாக்கி சுடுதலில் 14, பேட்மிண்டனில் 10, குத்துச்சண்டையில் 6, மல்யுத்தத்தில் 4, தடகளம், வில்வித்தை, பளுதூக்குதலில் தலா 2 பேர் என மொத்தம் 41 பேர் இடம் பெற்றுள்ளனர். மிஷன் ஒலிம்பிக் செல் என்ற குழு இதற்கான வீரர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியல் அவ்வப்போது பரிசீலிக்கப்படும் என சாய் இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார். #Olympic #TOPSAthlete #SAI
    Next Story
    ×