search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டியால் கவுன்ட்டி போட்டியை குறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்
    X

    ஐபிஎல் போட்டியால் கவுன்ட்டி போட்டியை குறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்

    ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடியதால் கேன் வில்லியம்சன் தனது கவுன்ட்டி போட்டிகளை குறைத்துக் கொண்டார். #KaneWilliamson
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். 2015-ல் இருந்தே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டேவிட் வார்னர் இருந்ததால், 2015-ம் ஆண்டு இரண்டு போட்டியிலும், 2016-ல் 6 போட்டிகளிலும், 2017-ல் 7 போட்டிகளிலும் மட்டுமே விளையாடினார்.

    இதனால் கேன் வில்லியம்சன் இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் விளையாடி வந்தார். முழுத்தொடரிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வருடமும் யார்க்‌ஷைர் அணிக்காக முழுத் தொடரிலும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

    ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் சிக்கினார். இதனால் வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது. இந்த தடையால் ஐபிஎல் தொடரில் வார்னர் இடம்பெறவில்லை.



    வார்னர் இல்லாததால் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் தொடர் முழுவதும் கேன் வில்லியம்சன் விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவதால் அவருடைய வேலைப்பளு அதிகம் ஏற்பட்டுள்ளது. இத்துடன் கவுன்ட்டி போட்டியில் விளையாடினால், உடல் அதிக அளவில் சோர்வடைந்துவிடும். ஆகவே, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கேன் வில்லியம்சனின் கவுன்ட்டி போட்டி அட்டவணையை வெகுவாக குறைத்துள்ளது.
    Next Story
    ×