search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி மெஷின் அல்ல- காயம் குறித்து ரவி சாஸ்திரி விளக்கம்
    X

    விராட் கோலி மெஷின் அல்ல- காயம் குறித்து ரவி சாஸ்திரி விளக்கம்

    கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ஓய்வு எடுக்கும் விராட் கோலி மெஷின் அல்ல என்று காயம் குறித்து ரவி சாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி காயம் அடைந்துள்ளார் என்ற செய்தி நேற்று வெளியானது. முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது என்றும், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. இறுதியில் முதுகுப் பகுதியில் காயம் ஏற்படவில்லை என்றும், கழுத்துப் பகுதியில்தான் காயம் ஏற்பட்டது என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியது.

    பிசிசிஐ மெடிக்கல் குழு பார்வையின் கீழ் விராட் கோலி காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவரது காயத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன்பின் தனது உடற்தகுதியை அவர் நிரூபிப்பார் என்று பிசிசிஐ மெடிக்கல் குழு தெரிவித்துள்ளது.

    காயத்தால் விராட கோலி சர்ரே கவுன்ட்டி அணியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து கவுன்ட்டி அணி ‘‘விராட் கோலி ஜூன் மாதம் சர்ரே அணியில் இணையமாட்டார் என்ற செய்தி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பிசிசிஐயின் மெடிக்கல் குழுவின் முடிவிற்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்’’ என்று செய்து வெளியிட்டுள்ளது.



    இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, விராட் கோலி மெஷின் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘விராட் கோலி கவுன்ட்டி ஆட்டத்தை கைவிட்டுள்ளார். ஏனென்றால், அவர் அந்த அணிக்குரிய முக்கியமான வீரர் அல்ல. அவர் மெஷின் கிடையாது. விராட் கோலி ஒரு மனிதன்.

    ராக்கெட் எரிபொருளை அவருக்கு பின்னால் கட்டி, அவரை மைதானத்திற்குள் இறக்கி விடுவது போன்றது கிடையாது. சிறந்த வீரராக இருந்தாலும் கூட அவருடைய முதுகில் ராக்கெட் எரிபொருளை கட்டி விடமுடியாது’’ என்றார்.
    Next Story
    ×