search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் - முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 50/1
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் - முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 50/1

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
    லார்ட்ஸ்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினர்.

    முதல் வரிசை ஆட்டக்காரர்களான ஸ்டோன்மேன், கேப்டன் ஜோ ரூட், தாவித் மலன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.

    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 70 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 184 ரன்னில் சுருண்டது.

    பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    அதன் பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலியும், இமாம் அல் ஹக் ஆகியோர் களமிறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் போது, இமாம் அல் ஹக் அவுட்டானார். அசரை தொடர்ந்து ஹரிஸ் சொகைல் இறங்கினார். இருவரும் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இதனால், முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 23 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 18 ரன்னுடனும், ஹரிஸ் சொகைல் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvPAK
    Next Story
    ×