search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விளையாடுவாரா?- 15-ந்தேதி பிட்னஸ் டெஸ்ட்
    X

    இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விளையாடுவாரா?- 15-ந்தேதி பிட்னஸ் டெஸ்ட்

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடமாட்டார் என்றும், வரும் 15-ந்தேதி பிட்னஸ் டெஸ்ட் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. #viratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் இன்று காலை காயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது. முதுகுத் தண்டில் லேசான காயம் ஏற்பட்டது என்றும், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் கவுன்ட்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் விராட் கோலிக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்படவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்று விராட் கோலியின் காயம் குறித்த சந்தேகத்தை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.



    மேலும், காயம் காரணமாக சர்ரே கவுன்ட்டி போட்டியில் விளையாடமாட்டார் என்றும் கூறியுள்ளது. மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கு முன் குணமடைந்து விடுவார் என்றும், தற்போதில் இருந்து விராட் கோலி பிசிசிஐ மெடிக்கல் குழுவின் கண்காணிப்பில் குணமடைவதற்கான சிகிச்சையை மேற்கொள்வார். அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கி, பிட்னஸ் டெஸ்டிற்கு உட்படுத்தப்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விராட் கோலியின் இங்கிலாந்து பயணம் ஜூலை 15-ல் தெரியவரும்.
    Next Story
    ×