search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
    X

    இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் குவாலிபையர் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. #IPL2018 #CSKvSRH #IPLFinal
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2008, 2010, 2011, 2012, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. இதில் 2 முறை (2010, 2011) கோப்பையை வென்று இருந்தது.

    இதுவரை நடந்த 11 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஆடிய 9 தொடரில் 2 முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு நுழையவில்லை. 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெறவில்லை. சூதாட்ட தடை காரணமாக 2016, 2017 போட்டியில் ஆடவில்லை.  #IPL2018 #CSKvSRH #IPL2018Playoffs #IPLFinal
    Next Story
    ×