search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூரோப்பியன் கோல்டன் ஷூவை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் மெஸ்சி
    X

    யூரோப்பியன் கோல்டன் ஷூவை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் மெஸ்சி

    லா லிகா தொடரில் பார்சிலோனாவிற்காக 34 கோல்கள் அடித்து யூரோப்பியன் கோல்டன் ஷூவை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றுள்ளார் மெஸ்சி. #Messi
    யூரோப்பா கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்து லீக் தொடர் ஆண்டுதோறும் நடைபெறும். இங்கிலாந்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்ஸில் லீக் 1, இத்தாலியில் செரி ஏ, ஜெர்மனியில் பண்டேஸ்லிகா போன்ற முன்னணி கால்பந்து லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.



    இந்த கால்பந்து லீக்கில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் கோல்டன் ஷூ வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்சி கோல்டன் ஷூவை தட்டிச் சென்றுள்ளார். மெஸ்சி இந்த சீசனில் 34 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 25 கோல்கள் அடிக்க துணைபுரிந்துள்ளார்.



    இவர் ஏற்கனவே, கடந்த வருடம், 2010, 2012 மற்றும் 2013-ல் இந்த விருதை கைப்பற்றியுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடும் முகமது சாலா 332 கோல்கள் அடித்து 2-வது இடம்பிடித்துள்ளார். டோட்டன்ஹாம் வீரர் ஹரி கேன் 30 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ 26 கோல்கள் அடித்து 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
    Next Story
    ×