search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே அணி பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம்
    X

    ஜிம்பாப்வே அணி பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம்

    ஜிம்பாப்வே அணியின் மூன்று கால பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் லால்சந்த் ராஜ்புட் நியிமிக்கப்பட்டுள்ளார். #ZIM
    2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இந்த தொடரின்போது ஜிம்பாப்வே தோல்வியடைந்து உலகக்கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் அனைவரையும் பதவியில் இருந்து தூக்கியது.

    இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன லால்சந்த் ராஜ்புட்டை குறுகிய கால தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. லால்சந்த்திற்கு முதல் தொடரே மிகவும் சாவாலானதாக இருக்கும். ஜிம்பாப்வேயில் வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உடன் முத்தரப்பு டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது.


    ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து ராஜ்புட், இதுகுறித்து கூறுகையில் ‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் எனக்கு போன் செய்து, என்னை பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக கூறினார்கள். தற்போது மூன்று மாதம் பயிற்சியாளராக இருக்க ஒப்புதல் தெரிவித்துள்ளேன். அதன்பின் இருபக்கமும் நீடிக்க விரும்பினால் பயிற்சியாளர் பதவி நீட்டிக்கப்படும்’’ என்றார்.
    Next Story
    ×