search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை
    X

    ஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். #IPL2018 #DD #RishabhPant
    ஐபிஎல் 11-வது சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸ், பவுண்டரி, அரைசதம், சதம் என அசத்தினார். இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.



    இந்த சீசனில் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் விளையாடி 5 அரைசதம், ஒரு சதத்துடன் 684 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் ராபின் உத்தப்பா 2014-ல் கொல்கத்தா அணிக்காக 660 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அத்துடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ஒரே விக்கெட் கீப்பர் உத்தப்பாதான்.



    கேஎல் ராகுல் இந்த சீசனில் 659 ரன்கள் குவித்து ஒரு ரன் இடைவெளியில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 248 ரன்கள் குவித்து 4-வது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 2013-ல் 510 ரன்களும், கில்கிறிஸ்ட் 2009-ல் 495 ரன்களும், டோனி 2013-ல் 461 ரன்களும், குயின்டாக் டி காக் 2016-ல் 445 ரன்களும் குவித்துள்ளனர்.
    Next Story
    ×