search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை இந்தியன்ஸ்-ல் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம்- ஹர்திக் பாண்டியா
    X

    மும்பை இந்தியன்ஸ்-ல் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம்- ஹர்திக் பாண்டியா

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்கிறார் ஹர்திக் பாண்டியா. #MI
    இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் இந்திய அணிக்கு வருதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்து பிரபலம் ஆனார். தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் அசத்தி வருகிறார்.



    மும்பை இந்தியன்ஸ் அணியில் தினந்தோறும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏராளமான ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம். ஆகவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கு நனவாகியுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×