search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை 2018- யூரோ சாம்பியன் அணியில் இருந்த 10 பேரை நீக்கியது போர்ச்சுக்கல்
    X

    உலகக்கோப்பை 2018- யூரோ சாம்பியன் அணியில் இருந்த 10 பேரை நீக்கியது போர்ச்சுக்கல்

    ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்துக்கான போர்ச்சுக்கல் அணியில் யூரோ சாம்பியன் அணியில் இருந்த 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். #WorldCup2018
    ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் 32 நாடுகள், தங்கள் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் போர்ச்சுக்கல் அணியும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோப்பிய சாம்பியன் தொடரில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த 10 பேர் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் யூரோப்பிய இறுதிப் போட்டியில் கோல் அடித்த ஈடர், முன்னணி வீரர் நானி, அன்ட்ரே கோமஸ், ரெனாடோ சான்செஸ், எலிசேயு ஆகியோர் அடங்குவார்கள்.


    ரெனாடோ சான்செஸ்

    போர்ச்சுக்கல் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    கோல் கீப்பர்கள்:- 1. அந்தோணி லோபஸ், 2. பெடோ, 3. ருய் பாட்ரிசியோ

    பின்கள வீரர்கள்:- 1. புருனோ ஆல்வ்ஸ், 2. செட்ரிக் சோரஸ், 3. ஜோஸ் போன்டே, 4. மரியோ ருய், 5. பெபே, 6. ரபெல் குயேர்ரெய்ரோ, 7. ரிகார்டோ பெரைரா, 8. ரூபென் தியாஸ்.



    நடுகள வீரர்கள்:- 1. அன்ட்ரியன் சில்வா, 2. புருனோ பெர்னாண்டஸ், 3. ஜோஓ மரியோ, 4. ஜோஓ மவுட்டினோ, 5. மானுவேல் பெர்னாண்டஸ், 6. வில்லியம் கார்வாலோ.

    முன்கள வீரர்கள்:- 1. அன்ட்ரே சில்வா, 2. பெர்னார்டோ சில்வா, 3. கிறிஸ்டியானோ ரொனால்டோ, 4. ஜெல்சன் மார்டின்ஸ், 5. கோன்சாலோ குயேடெஸ், 6. ரிகார்டோ குயேரெஸ்மா.
    Next Story
    ×