search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னடத்தை விதியை மீறிய டிம் சவுத்திக்கு ஐபிஎல் கண்டனம்
    X

    நன்னடத்தை விதியை மீறிய டிம் சவுத்திக்கு ஐபிஎல் கண்டனம்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் விவகாரத்தில் பேட்டியளித்த டிம் சவுத்திக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. #IPL2018
    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி வில்லியர்ஸ் (69), மொயீன் அலி (65) கொலின் டி கிராண்ட்ஹோம் (40), சர்பராஸ் கான் (22) ஆகியோரின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி வந்தது. ஆனால், டிம் சவுத்தி, முகமது சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்களும், மணிஷ் பாண்டே 38 பந்தில் 62 ரன்களும் சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதாராபத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 3-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த டிம் சவுத்தி வேகமாக ஓடிவந்து டைவ் அடித்து பந்தை பிடித்தார். பந்து கையில் இருந்து தரையில் பட்டதாக தெரியவில்லை. டிவி நடுவரின் ரீப்ளே-யில் பந்து கீழே பட்டதாக தெளிவாக தெரியவில்லை. ஆனால், நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் டிம் சவுத்தி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் மிகவும் அப்செட் ஆனார்கள்.



    பின்னர் அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின்னர் டிம் சவுத்தி டிவிக்கு பேட்டியளிக்கையில் கேட்ச் குறி்த்து பேசினார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக டிம் சவுத்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை டிம் சவுத்தி ஒத்துக் கொண்டார். இது லெவல்-1 வரைமுறைக்குள் வருவதால் கண்டனத்துடன் டிம் சவுத்தி அபராதம் இல்லாமல் தப்பினார். ஆனால், டிம் சவுத்தி மீதான நடவடிக்கை எடுக்க என் காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×