search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் கவுன்டி அணியில் விளையாட வாய்ப்பு
    X

    அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் கவுன்டி அணியில் விளையாட வாய்ப்பு

    ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் விலகியதால் வொர்செஸ்டர்ஷைர் கவுன்டி அணியில் அஸ்வின் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #CountyCricket
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் சமீப காலமாக இடம் கிடைக்கவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடினார். அவர் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக களம் இறங்கினார்.

    கவுன்டி அணியில் வெளிநாட்டு வீரர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளையாட முடியும். இந்த சீசனில் வொர்செஸ்டர்ஷைர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை ஒப்பந்தம் செய்திருந்தது.



    தற்போது அவர் வொர்செஸ்டர்ஷைர் அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அஸ்வின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் வொர்செஸ்டர்ஷைர் அணியில் இணைந்தால், எசக்ஸ், யார்க்சைர் அணிகளுக்கு எதிராக இரண்டு போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
    Next Story
    ×