search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் அம்பதி ராயுடு- ரகானே அவுட்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் அம்பதி ராயுடு- ரகானே அவுட்

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பதி ராயுடுக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்கிடைத்துள்ளது. #ENGvIND
    இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இரு நாடுகளுக்கு எதிரான டி20 தொடரை முடித்த உடன் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுகிறது.

    டி20 அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி வரும் அம்பதி ராயுடுவிற்கு இடம்கிடைத்துள்ளது.



    அதேபோல் சித்தார்த் கவுல், வாஷிங்டன் சுந்தர, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளனர். ஆனால், தென்ஆப்பிரிக்கா தொடரில் விளையாடிய ரகானேவிற்கு இடம்கிடைக்கவில்லை.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி (கேப்டன்) 2. தவான், 3. ரோகித் சர்மா, 4. லோகேஷ் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. அம்பதி ராயுடு, 7. டோனி (விக்கெட் கீப்பர்), 8. தினேஷ் கார்த்திக், 9. சாஹல், 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர், 12. புவனேஸ்வர் குமார், 13. பும்ரா, 14. ஹர்திக் பாண்டியா, 15. சித்தார்த் கவுல், 16. உமேஷ் யாதவ்.
    Next Story
    ×