search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- வாழ்வா? சாவா? கூட்டணியில் இணைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    ஐபிஎல் 2018- வாழ்வா? சாவா? கூட்டணியில் இணைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

    பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் வாழ்வா? சாவா? கூட்டணியில் இணைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #KXIPvRR
    ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் இந்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் கேஎல் ராகுல் 54 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவைத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 போட்டியில் தலா மூன்று வெற்றி, தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றிருந்தது.

    அதன்பின் அந்த அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. சன்சரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து சிக்கலில் மாட்டிக்கொண்டது.



    தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் முடிவில் 3 வெற்றி, 6 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் அந்த அணிக்கு 5 போட்டிகள் உள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப்ஸ் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இதனால் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுடன் வாழ்வா? சாவா? கூட்டணியில் சேர்ந்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டியுள்ளது.
    Next Story
    ×