search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
    X

    ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #CWG2018
    ஆஸ்திரேலியா நாட்டின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 5 விளையாட்டு வீரர்கள், 1 வீராங்கனை மற்றும் அவர்களது 8 பயிற்றியாளர்களுக்கு மொத்தம் 4 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை 24.4.2018 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக, 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா வுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.



    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, பால கிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×