search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பைக்கு ரியலான போட்டி அணியாக ஆஸ்திரேலியா திரும்பும்- கேரி கிர்ஸ்டன்
    X

    உலகக்கோப்பைக்கு ரியலான போட்டி அணியாக ஆஸ்திரேலியா திரும்பும்- கேரி கிர்ஸ்டன்

    இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ரியலான போட்டி அணியாக ஆஸ்திரேலியா திரும்பும் என கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.
    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணியாக விளங்கி வருவது ஆஸ்திரேலியா. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அந்த அணிக்கு சோதனையுடன் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது. கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார்.

    இதற்கு வார்னர்தான் முக்கிய காரணம் என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பேட்டியளிக்கையில் கேப்டன் ஸ்மித், தனக்கு இந்த சம்பவம் குறித்து தெரியும் என அதிர்ச்சிகரமான செய்தியை கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு வருடம் தடைவிதித்தது. இதனால் முன்னணி வீரர்களான இருவரும் ஒரு வருடம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியது என்ற நீங்காத கரையில் இருந்து திரும்பி, ரியலான உலகக்கோப்பை போட்டியாளராக மீண்டு வருவார்கள் என்று தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா எந்தவொரு மிகப்பெரிய தொடரில் இருந்தும் விலகுவதை உங்களால் பார்க்க முடியாது. மிகப்பெரிய தொடர்களில் அந்த அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஒன்று. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் சரியான போட்டி கொடுக்கும் அளவிற்கு தயாராவார்கள் என்பது உறுதி’’ என்றார்
    Next Story
    ×