search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    ஐபிஎல் 2018- ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    கேன் வில்லியம்சின் அரைசதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RRvSRH
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 28-வது லீக்கான முதல் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்தமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹேல்ஸ் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 109 ரன்கள் இருந்த நிலையில் ஹேல்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அடுத்த சில நிமிடங்களில் அரைசதம் அடித்திருந்த கேன் வில்லியம்சன் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14.5 ஓவரில் 116 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஸ்கோர் 170 ரன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான் ஆகியோரை 18-வது ஓவரில் ஜாஃபர் ஆர்சர் வீழ்த்தினார். இதனால் ரன் விகிதம் அப்படியே இறங்கி போனது.

    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் மணிஷ் பாண்டே 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை ஆர்சன் வீசினார். இந்த ஓவரில் ஆர்சர் 1 விக்கெட் வீழ்த்தி 8 ரன்கள் விட்டுக்கொடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 151 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    Next Story
    ×