search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய பேட்மிண்டன் போட்டி- சிந்து, சாய்னா கால்இறுதிக்கு தகுதி
    X

    ஆசிய பேட்மிண்டன் போட்டி- சிந்து, சாய்னா கால்இறுதிக்கு தகுதி

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய்னா, மற்றும் ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.#SainaNehwal #PVSindhu #AsiaBadmintonChampionship
    வுஹான்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் ஜியோஜினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் காவ் பாங்ஜியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்ட்டை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 7-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது வோங் விங் கி வின்சென்ட் காயம் காரணமாக விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 16-21, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் சீனதைபே வீரர் வாங் சு வெய்யை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் சென் லாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். #SainaNehwal #PVSindhu #AsiaBadmintonChampionship
    Next Story
    ×