search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
    X

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும்: சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை

    2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. #2028Olympics #ICC #LosAngeles
    கொல்கத்தா:

    ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற எங்களுடைய நகர்வு சிறப்பாக சென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறிஉள்ளார்.

    கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. இன்று கடைசி நாளில் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பது மற்றும் கிரிக்கெட் போட்டியை உலகமயமாக்குதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதற்கான பணியில் துரிதமாக இறங்கிஉள்ளோம். எங்களுடைய முயற்சிகள் சரியான பாதையில் பயணித்தால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும். 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்கக் கோரும் மனுவை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அளிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆதலால், 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை இணைக்க முடியாது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவுடன் நாங்கள் பேசிவருகிறோம். எங்களுடைய பேச்சுவார்த்தை சிறப்பாக சென்றால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறும் என டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.  #2028Olympics #ICC #LosAngeles #Tamilnews 
    Next Story
    ×