search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறதா? ஐசிசி சி.இ.ஓ பதில்
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறதா? ஐசிசி சி.இ.ஓ பதில்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அடுத்தாண்டு நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அதில் மோதுகிறதா? என்ற கேள்விக்கு ஐசிசி தலைமை செயல் அதிகாரி பதிலளித்துள்ளார். #ICC #INDvPAK
    கொல்கத்தா:

    டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகளை கொண்டு உலக டெஸ்ட் லீக்கை அடுத்தாண்டு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, 2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் திட்டமிட்டப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினார். உலக டெஸ்ட் லீக்-ஆனது ஐந்து தொடர்களாக நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். “இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்த தொடர் மிகவும் சவாலானது. வீரர்களின் உடல்தகுதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்” என ரிச்சர்ட்சன் கூறினார்.

    டேவிட் ரிச்சர்ட்சன்

    மேலும், “முழு போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும். முதல் இரண்டு சுற்று ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஐசிசி நேரடி தொடர்கள் தவிர இந்தியாவும், பாகிஸ்தானும் தனி தொடராக மோதினால், அது சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக பல்வேறு பிரச்சனைகள் அதில் உள்ளது” என அவர் தெரிவித்தார். #ICC #INDvPAK
    Next Story
    ×