search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரோனாச்சாரியார் விருதுக்கு டிராவிட்  பெயர் பரிந்துரை
    X

    துரோனாச்சாரியார் விருதுக்கு டிராவிட் பெயர் பரிந்துரை

    இந்த ஆண்டுக்கான துரோனாச்சாரியார் விருதுக்கு 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #BCCI #RahulDravid #Dronacharyaaward


    புதுடெல்லி:

    இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் துரோணாச்சார்யா விருது 1985ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, ரூ. 3 லட்சம் மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான துரோனாச்சாரியார் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டிராவிட் 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.


    விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணி கேப்டன் வீராட்கோலியின் பெயரை கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. சுனில் கவாஸ்கரை வாழ் நாள் சாதனையாளரான தயான்சந்த் விருதுக்கும் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BCCI #RahulDravid #Dronacharyaaward

    Next Story
    ×