search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2018 - பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

    சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் போடப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு மனன் வோராவும், டெல்லி அணியில் ஷமி நீக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. எம் எஸ் டோனி, 6. ரவிந்திர ஜடேஜா, 7. வெய்ன் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. சர்துல் தாகூர், 11. இம்ரான் தாஹிர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. குயின்டான் டி காக், 2. விராட் கோலி, 3. டி வில்லியர்ஸ், 4. மந்தீப் சிங், 5. கோரி ஆண்டர்சன், 6.கொலின் டி கிரான்ட்ஹோம், 7. வாஷிங்டன் சுந்தர், 8. பவன் நெகி, 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

    #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore
    Next Story
    ×