search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இப்போது தான் 25 வயதாவது போல் உணர்கிறேன் - சச்சின் தெண்டுல்கர்
    X

    இப்போது தான் 25 வயதாவது போல் உணர்கிறேன் - சச்சின் தெண்டுல்கர்

    நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், எனக்கு இப்போது தான் 25 வயது போல் உணர்கிறேன் என கூறினார். #sachinturns45 #HappyBirthdaySachin #SRT45

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18426 ரன்களும் குவித்துள்ளார்.

    நேற்று சச்சின் தெண்டுல்கருக்கு 44 வயது முடிவடைந்து, 45-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்தார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், முகமது கையிப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியின் போது சச்சின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். 



    அதன்பின் விவிஎஸ் லட்சுமண், சச்சின் உடன் உரையாடினார். அப்போது அவர்கள் பேசியதாவது:-

    விவிஎஸ்: பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின். உங்களுக்கு இன்று 45 வயது ஆகிவிட்டது, ஆனால் பார்த்தால் நன்றாக பிட்டாக இருப்பது போல் தெரிகிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்? 

    சச்சின்: உருவத்தை பார்த்து முடிவு செய்யாதீர்கள், லச்சி. எனக்கு 20 ஆண்டு அனுபவத்துடன் 25 வயது ஆவது போல் உணர்கிறேன்.

    விவிஎஸ்: நான் அவரை 1996ம் ஆண்டு முதன்முதலாக பார்க்கும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் இன்னும் இருக்கிறார் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் கொடுத்த நினைவுகளை நீங்கள் எப்படி நினைவுகூருகிறீர்கள்?

    சச்சின்: அது ஒரு அற்புதமான பயணம். நான் சில பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள் பாலைவன புயல் விளையாட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. நேரம் வேகமாக கடந்துவிட்டது.

    விவிஎஸ்: அப்போது எதிர்முனையில் விளையாடியது எனது அதிர்ஷ்டம், அந்த நாளில் நான் உங்கள் எதிர்முனையில் இருந்ததை நீங்கள் பதிவு செய்யவில்லை.

    சச்சின்: உண்மையில், நான் வீட்டிற்கு திரும்பி வந்தபோது திட்டு வாங்கினேன். சில விரைவான ரன்களை எடுக்க முயன்றபோது நமக்குள் சில தவறான புரிந்துணர்வுகள் இருந்தது. ஆடுகளத்தில் வைத்து உங்களை பார்த்து கத்தியதற்காக எனது சகோதரர் என் மீது கோபப்பட்டார். எனது சகோதரர், ‘என்ன செய்கிறாய்? அவர் உனது அணிவீரர், உனக்கு உறுதுணையாக இருக்கிறார், ஆனால் நீ அவர் மீது கோபம் கொள்கிறாய்’, என கூறினார். நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, அதுபோன்று மறுபடி நடக்காது என உறுதி அளித்தேன்.

    விவிஎஸ்: அது உங்களது மிகச்சிறப்பான ஆட்டங்களுல் ஒன்று என நான் உறுதியாக கூறுவேன். நான் ஆடுகளத்தில் இருந்தேன், ஆனால் அவர் அனைத்து பொறுப்புக்களையும் தன்னிடம் எடுத்துகொண்டு இந்தியாவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற செய்தார். உங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வான்கடே மைதானத்திற்கு மீண்டும் திரும்பி பிறந்தநாள் கொண்டாடுவது எப்படி இருக்கிறது.

    சச்சின்: இது சிறப்புமிக்க மைதானம், எனக்கு இங்குதான் ஒரு தொடக்கம் கிடைத்தது. எனது முதல் தர போட்டிகள் முதல், உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் எனது கடைசி போட்டி வரை நான் இங்கு தான் விளையாடினேன். நான் மக்களின் ஆதரவை முழுமையாக அனுபவித்திருக்கிறேன். இந்தியா முழுவதும் எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இது ஒரு ஆசீர்வாதம். இங்கே கழித்த ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன்.

    விவிஎஸ்: உங்கள் பிறந்தநாள் எப்படி சென்றது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    சச்சின்: தாயின் ஆசிர்வாதத்துடன் நாள் தொடங்கியது. அதன்பின் என் வீட்டின் வெளியே கூடியிருந்த ரசிகர்களை சந்தித்தேன். அதில் பலருடன் செல்பி புகைப்படம் எடுத்துகொண்டேன். செல்பி தான் தற்போதைய கையெழுத்து என கருதுகிறேன். சிலநேரங்களில், நீங்கள் கையொப்பமிட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் நீங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும். அதன்பின் எனது கம்பேனியின் இணையதளத்தை (srt10.in) தொடங்கி வைத்தேன். மாலையில் ‘மேக் ஏ விஷ்’ பவுண்டேசனில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரத்தை செலவழித்தேன். இது ஒரு நல்ல நாளாக அமைந்தது. அதன்பின் அணின் கூட்டத்தில் உங்களுக்கு எதிராக திட்டமிட்டோம்.

    விவிஎஸ்: வாழ்த்துகள் சச். உங்களுடன் விளையாடியது எனக்கு பெருமையாகும். நீங்கள் ஒரு தூண்டுதலாக இருந்தீர்கள், நீங்கள் ஓய்வு பெற்ற போதிலும் எங்களை ஊக்குவிக்கிறீர்கள். 
    நாட்டுக்காக சச்சின் பெரிய பங்களித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுயபோதும், அதன்பின் பல்வேறு முயற்சிகளாலும் நாட்டுக்கு பங்களித்து வருகிறார். மிக்க நன்றி. ஒரு நல்ல ஆண்டு மற்றும் அழகான வாழ்க்கை அமையட்டும். நீங்கள் மகிழ்ச்சியை பரப்புபவனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    சச்சின்: மிக்க நன்றி.

    இவ்வாறு விவிஎஸ் லட்சுமணின் கேள்விகளுக்கு சச்சின் தெண்டுல்கர் பதிலளித்தார். #sachinturns45 #HappyBirthdaySachin #SRT45
    Next Story
    ×