search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
    X

    தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

    நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது. #SouthAsianJudoChampionship

    காத்மண்டு:

    தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளத்தின் காத்மண்டு நகரில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டவர்கள் பல பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

    இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்த போட்டிகளில் இந்தியா 10 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 தங்கப்பதக்கங்களும், ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளது. இது தவிர மூன்று வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளது. மொத்தத்தில் 10 தங்கம், 3 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.



    நேபாளாம் 2 தங்கம், ஆறு வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 21 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இலங்கை மூன்று தங்கம், ஐந்து வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. வங்காளதேசம் இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்றுள்ளது. பூட்டான் ஒரு வெண்கலப்பதக்கத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. #SouthAsianJudoChampionship
    Next Story
    ×