search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உமேஷ் யாதவ் விட்டுக் கொடுத்த ரன்கள்- சுவாரஸ்ய புள்ளி விவரம்
    X

    உமேஷ் யாதவ் விட்டுக் கொடுத்த ரன்கள்- சுவாரஸ்ய புள்ளி விவரம்

    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ் விட்டுக்கொடுத்த ரன்களில் ஒரு சுவாரஸ்யம் அடங்கியுள்ளது. #RCB
    ஐபிஎல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் உமேஷ் யாதவ் ஐந்து போட்டிகளிலும் விளையாடி 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ஐந்து போட்டிகளிலும் முதல் இரண்டு ஓவர்களை உமேஷ் யாதவ் மிகவும் அபாரமாக வீசியுள்ளார். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அத்துடன் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

    ஐந்து போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.



    2-வது ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 4.60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ஆனால் 3-வது ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். ஓவருக்கு சராசரி 9.40 ரன்னாகும். மிகவும் மோசம் கடைசி ஓவர்தான். 4-வது ஓவரில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 77 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 15.40 ஆகும். 8 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×