search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்- தாஹிருக்குப் பதில் டு பிளிசிஸ்- தவான் அவுட்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்- தாஹிருக்குப் பதில் டு பிளிசிஸ்- தவான் அவுட்

    ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. #SRHvCSK
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் சுண்ட, டோனி ‘டெய்ல்’ என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டு பிளிசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. டு பிளிசிஸ், 5. டோனி, 6. சாம் பில்லிங்ஸ், 7. வெயின் பிராவோ, 8. ஜடேஜா, 9. கரண் சர்மா, 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தவான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜோர்டான் நீக்கப்பட்டு பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரிக்கி புய், 2. சகா, 3. கேன் வில்லியம்சன், 4. யூசுப் பதான், 5. மணிஷ் பாண்டே, 6. ஷாகிப் அல் ஹசன், 7. தீபக் ஹூடா, 8. பில்லி ஸ்டேன்லேக், 9. புவனேஸ்வர் குமார், 10. ரஷித் கான், 11. சித்தார்த் கவுல்.
    Next Story
    ×