search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடியை வெளிப்படுத்தும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள்
    X

    அதிரடியை வெளிப்படுத்தும் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள்

    கிறிஸ் கெயல், கேஎல் ராகுல், வாட்சன் போன்ற முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் படையை கிளப்பி வருகிறார்கள். #IPL2018
    ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. முன்னணி வீரர்களை கொண்டு அந்த அணி விளையாடிய போதிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி வாய்ப்பை இழந்ததுள்ளது.

    பெங்களூர் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும். ஆனால் பந்து வீச்சில் கோட்டை விட்டுவிடும். கடந்த சீசனில் ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கேதர் ஜாதவ் போன்றோர் ஆர்சிபியில் விளையாடினார்கள். கேஎல் ராகுல் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.

    இந்த சீசனுக்கான ஏலத்தில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பிராஸ் கான் ஆகியோரை தக்கவைத்திருந்தது. கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோரை ஏலத்தில் கூட எடுக்கவில்லை.

    கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கேஎல் ராகுல் டெல்லிக்கு எதிராக 15 பந்தில் அரைசதம் அடித்து சாதனைப்படைத்தார். கிறிஸ் கெய்ல் சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக சதம் அடித்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வாட்சன் பந்து வீச்சில் அசத்துவதுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சதத்தையும் பூர்த்தி செய்தார்.



    அதேவேளையில் ஆர்சிபி அணியில் தக்கவைத்துள்ள சர்பிராஸ் கான் மூன்று இன்னிங்சில் 11 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். டி வில்லியர்ஸ் இன்னும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விராட் கோலி மட்டும் இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.

    ஆர்சிபி அணியில் குயின்டான் டி காக், டி வில்லியர்ஸ், பிராண்டன் மெக்கல்லம், விராட் கோலி, மந்தீப் சிங் ஆகியோர் இருந்தும் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர்கள் சிறப்பாக விளையாடினால் ஆர்சிபி அணி எளிதாக வெற்றி பெறும்.
    Next Story
    ×