search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    22 வருட அர்செனல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் அர்சேன் வெங்கர்
    X

    22 வருட அர்செனல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார் அர்சேன் வெங்கர்

    அர்செனல் பயிற்சியாளராக 22 வருட காலம் பணியாற்றிய அர்சேன் வெங்கர் இந்த சீசன் முடிந்த உடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்சேன் வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சேன் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.

    கடந்த சீசனில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அர்சேன் வெங்கர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அர்செனல் கிளப் அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது.



    இந்த சீசனிலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகிறது. இதனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த சீசனோடு அர்செனல் பயிற்சியளார் பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

    இதனால் அர்செனலின் 22 வருடகால பயிற்சியாளர் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 2017-18 இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அர்செனல் 33 போட்டிகளில் 16 வெற்றி, 6 டிரா, 11 தோல்விகளுடன் 54 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இன்னும் ஐந்து போட்டிகள் மீதமுள்ளன.
    Next Story
    ×