search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி பெறுமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
    X

    ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி பெறுமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

    ஐபிஎல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் இன்று இரவு புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான்ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடரில் இன்று இரவு புனேயில் நடக்கும் 17-வது ‘லீக்’ ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான்ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சேப்பாக்கத்தில் நடக்க வேண்டிய இப்போட்டி காவிரி நதிநீர் போராட்டம் காரணமாக புனேவுக்கு மாற்றப்பட்டது. இப்போட்டியை தவிர சென்னையில் நடக்க இருந்த 5 ஆட்டமும் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 3 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. ஒரு தோல்வி அடைந்தது. ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், டோனி, பிராவோ போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் சாகர், ஹர்பஜன்சிங், தாகூர், இம்ரான் தாகீர் ஆகியோர் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். கடைசி ஆட்டத்தில் அதிக ரன்களை கொடுத்து விடுகிறார்கள். இந்த தவறுகளை சரி செய்ய சென்னை வீரர்கள் முயற்சிக்கிறார்கள்.

    கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. அதிலிருந்து மீண்டு வெற்றி பெறும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

    இதனால் புனே மைதானத்தில் மஞ்சள் நிறத்துக்கும் பஞ்சம் இருக்காது. இது உள்ளூர் மைதானத்தில் விளையாடும் உணர்வை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை.

    உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதை டோனியின் படை தவற விட்டாலும், அவர்களை உற்சாகப்படுத்த சிறப்பு ரெயிலில் சென்னையில் இருந்து 1000 ரசிகர்கள் புனேவுக்கு சென்று உள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் ரகானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    மேலும் ஷார்ட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், திரிபாதி, ஜெய்தேவ் உனட்கட், குல்கர்னி போன்ற வீரர்களும் உள்ளனர்.

    அந்த அணியும் 3-வது வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. 2 ஆண்டு தடைக்கு பிறகு களத்துக்கு வந்துள்ள இரு அணிகளும் மோதும் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL
    Next Story
    ×